ஆசிரியர்களுக்கு
உங்கள் மாணவர்கள் வீட்டில் பயிற்சி செய்யும்போது சிக்கினால், ஆசான் தமிழில் படிப்படியாக வழிகாட்டும். அவர்கள் எங்கே சிக்குகிறார்கள் என்பதை நீங்கள் உங்கள் phone இலேயே பார்க்கலாம். இந்தப் பக்கத்தை வாசித்து, கீழே இங்கேயே விண்ணப்பியுங்கள்.
ஒரே இடத்தில்
உங்கள் வகுப்புகள், மாணவர் முன்னேற்றம், பொதுவான பிழைகள்
வடக்கு · கிழக்கு
எந்தப் பிரதேசத்து ஆசிரியரும் விண்ணப்பிக்கலாம்
5 நிமிடம்
விண்ணப்பிக்க; அலுவலகம் சரிபார்த்ததும் அனுமதி
ஆசான் என்பது இலங்கைத் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான AI ஆசிரியர் உதவியாளர். மாணவர் பாடநூல் கேள்விகளைத் தானே தீர்க்கும்போது, ஒவ்வொரு படியையும் சரிபார்த்து, இலங்கைத் தமிழில் குறிப்புகளும் கேள்விகளும் தந்து வழிகாட்டும். விடையை நேரடியாகச் சொல்லாது – மாணவரைச் சிந்திக்க வைக்கும். இப்போது O/L கணிதம்; மேலும் பல பாடங்கள் விரைவில்.
ஆசான் உங்கள் கற்பித்தலுக்குப் பதிலானது அல்ல, துணையானது. வகுப்பில் நீங்கள் கற்பித்ததை மாணவர்கள் வீட்டில் பயிற்சி செய்யும்போது ஆசான் உதவும்.
எத்தனை வகுப்புகளையும் உருவாக்கலாம் – உதா. "தரம் 11 · சனி காலை".
பெயர்களைச் சேர்த்ததும் ஒவ்வொருவருக்கும் குறியீடு + PIN அட்டைகளை print செய்யலாம்.
யார் எத்தனை கேள்விகள் தீர்த்தார், யார் எங்கே சிக்கினார் – ஒரே பார்வையில்.
வகுப்பில் பலர் விடும் பிழைகள் தெரியும் – அடுத்த வகுப்பில் அவற்றைத் திருத்தலாம்.
1
இந்தப் பக்கத்தின் கீழே பெயர், தொலைபேசி, பாடசாலை, பாடம், கடவுச்சொல்.
2
அலுவலகம் உங்கள் விபரங்களைச் சரிபார்க்கும்; தேவைப்பட்டால் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்.
3
அனுமதி கிடைத்ததும் அதே இலக்கம், கடவுச்சொல்லுடன் "ஆசிரியர் உள்நுழைவு".
4
"வகுப்பை உருவாக்கு" → பிள்ளைகளைச் சேருங்கள் → அட்டைகளை print செய்யுங்கள்.
வகுப்புக் குறியீடு
K7M2PQ
வகுப்பறையின் கதவு இலக்கம் மாதிரி – அந்த வகுப்பில் உள்ள எல்லோருக்கும் ஒன்றே.
PIN (4 இலக்கம்)
4821
ஒவ்வொரு மாணவரின் சொந்தத் திறப்பு மாதிரி – ஒவ்வொருவருக்கும் வேறு.
முக்கியம்: PIN ஒரு முறை மட்டுமே திரையில் காட்டப்படும் – அட்டைகளை உடனே print செய்யுங்கள். மாணவர் PIN ஐ மறந்தால் நீங்கள் புதிய PIN உருவாக்கலாம்; முன்னேற்றம் அழியாது.
18 வயதுக்குக் குறைந்த மாணவரைச் சேர்க்க முன் பெற்றோர் சம்மதம் பெற வேண்டும் (அலுவலகம் தரும் சம்மதப் படிவம், அல்லது பெற்றோரின் online பதிவு).
அட்டைகளை உரிய மாணவரிடம் மட்டும் கொடுங்கள். PIN களை உரத்து வாசிக்கவோ, குழுக்களில் பகிரவோ வேண்டாம்.
உங்களிடம் கற்கும் மாணவர்களை மட்டுமே சேருங்கள். ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டும்.
AI சில வேளை தவறலாம். "உதவவில்லை" எனக் குறிக்கப்பட்டவற்றைப் பார்த்து, உண்மையான பிழையை அலுவலகத்துக்குத் தெரிவியுங்கள்.
மாணவர் தகவல்களை ஆசான் கற்பித்தலுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்; வேறு யாருடனும் பகிர வேண்டாம்.
விடையை நேரடியாகச் சொல்லாது · கணிதத்துக்கு வெளியே உரையாடாது · மாணவரின் phone/email சேகரிக்காது · விளம்பரம் இல்லை.
ஆசிரியர் கணக்குகள் அலுவலகத்தின் அனுமதியுடன் மட்டுமே திறக்கப்படும். விதிமுறைகளுக்கு மாறாகப் பயன்படுத்தினால் கணக்கு நிறுத்தப்படலாம்.
விண்ணப்பித்த பின், அலுவலகம் உங்கள் விபரங்களைச் சரிபார்த்து அனுமதி தரும். அனுமதி கிடைத்ததும் இதே இலக்கம், கடவுச்சொல்லுடன் உள்நுழையலாம்.
ஏற்கனவே அனுமதி கிடைத்ததா? ஆசிரியர் உள்நுழைவு › · கேள்விகள்: WhatsApp +94 77 931 3910